குரோம்,ஃபயர்ஃபாக்ஸ்,எக்ஸ்ப்ளோரர்,ஒபேரா,சபாரி,போன்ற இணைய உலாவிகளில் உள்ள புக்மார்க்,ஆட்ஆன்,செட்டிங்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர்
செய்ய அருமையான இலவச ( மிக சிறிய 116 KB தான் ) கருவி உள்ளது அதன் பெயர் BOOK MARKS BACKUP அதை இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை .
கடந்த பதிவில் இணைய உலாவிகளில் புக் மார்க் செய்வது எப்படி
என்று பார்த்தோம் . இனி அதை எவ்வாறு பேக்கப் செய்வது என்பதை இந்த பதிவில்
வெளியிடுகிறேன் ஏன் இந்த பேக்கப் ?.என்றாவது ஒரு நாள் நமது கணினி தன்னிலை இழக்கும் போது அதில் உள்ள எல்லா
தகவல்களும் அழிந்து விடலாம் .அவைகளில் பிரவுசரில் உள்ள இந்த இணைய தள முகவரிகளும் அழிந்துவிடும் , இனி புதிதாக எல்லாம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இன்ஸ்டால் பண்ணினாலும்
முகவரிகள் கிடைக்காது . இனி விசயத்திற்கு வருவோம்
முதலில் கீழுள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி
அந்த சாப்ட்வேரை டவுன்லோட்
செய்து win rar
கொண்டு விரித்து ( இன்ஸ்டால் செய்ய தேவையில்லை ).அதை டபுள் கிளிக்
செய்து வரும் option-ல் படத்தில் காட்டியவாறு
டிக் செய்யுங்கள் select backup folder
என்பதில் உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யுங்கள் அவ்வளவு தான் backup பட்டனை அழுத்துங்கள் வரும் option- ல்
ok கொடுங்கள்
அவ்வளவு தான் கீழே படத்தில் உள்ளவாறு வந்திருக்கும் OK
இனி சேவ் செய்த போல்டரில் போய் பாருங்கள் ஒவ்வொரு
பிரவுசரும்
தனித்தனியாக பேக்அப் ஆகி இருக்கும் இனி இதை வேறொரு கம்ப்யூட்டரிலோ அல்லது புதிதாக ஆபரேட்டிங் சிஸ்டம் நிறுவிய பின் ,பிரவுசர் இன்ஸ்டால்
செய்த பிறகு restore செய்ய பிரவுசர் தேர்ந்தெடுத்து locate அழுத்தி
எந்த DRIVE வில்
நீங்கள் சேமித்த ஃபைல் உள்ளதோ அதை
கொடுத்து restore பட்டனை அழுத்தினால் .சில வினாடிகளில் உங்கள் பழைய பிரவுசரில் உள்ள எல்லா
தகவல்களும் மீட்கப் படும் .
குறிப்பு ;நீங்கள் பேக்அப் செய்த ஃபைல்-ஐ
கம்ப்யூட்டர் –ல் C-DRIVE வை தவிர்த்து வேறு DRIVE-ல் ,pen drive , அல்லது cd -ல்
சேமித்தால் நல்லது
அப்போதுதான் கம்ப்யூட்டர் problem ஆகும் போது பேக்அப் செய்த எதையும் மீட்க முடியும்

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ...இது
இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே இண்டலி, தமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக்
செய்வதன் மூலமும் கீழே பேஸ்புக் ,ட்வீட்டர் கூகுல் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய
செய்யுங்கள் ..
உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும்
நன்றி ....
nalathu sir.pathivukku nandri
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சார் .
ReplyDelete