என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Thursday 9 August 2012

Mp3 சினிமா பாடல்களில் நமது புகைப்படம் அல்லது படங்களை (ஆல்பம் ஆர்ட் ) இணைப்பது எப்படி ?

நாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு  நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?





ஆடியோ ப்ளேயர்கள் பலவற்றில் இந்த வசதி  இருந்தாலும் இது எளிமையானது 
இதற்கு முதலில் இந்த ப்ளேயர் -ஐ கம்ப்யூட்டர்-ல்  இன்ஸ்டால் செய்யுங்கள் இதன் பெயர் மீடியா மங்கி ( media monkey அளவு (7.8 எம்‌பி) இது ஒரு இலவச சாப்ட்வேர் 

டவுன் லோட் செய்ய  இங்கு (கிளிக் செய்யுங்கள் ) 

(டவுன் லோட்  செய்த file ஐ winrar மூலம் extract செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் )
முதலில் பாடல் உள்ள போல்டர் மற்றும், நீங்கள் சேர்க்க விரும்பும் படம் இவற்றை Desk top-ல் வையுங்கள்.

குறிப்பு ; உங்கள் படத்தின் அளவு 50 kb க்குள் இருந்தால் நல்லது ஏன் என்றால் பாடல் அளவு கூடிவிடும்
இப்போது பாடலை ரைட் கிளிக் செய்து open with செலக்ட் செய்து media monkey மூலம் play செய்யுங்கள் பாடல் பாட ஆரம்பித்தவுடன் கீழே இடது மூலையில் ஆல்பம் ஆர்ட் படம் தோன்றும் (தோன்றவில்லை என்றால் அதில் யாரும் படம் சேர்கவில்லை என்று அர்த்தம் ) அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியபடி செய்யவும் .
படங்களை  பெரிதாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யுங்கள் 




அவ்வளவுதான் இனி நீங்கள்அந்த பாடலை  play செய்யும் எந்த ப்ளேயர் களிலும் உங்கள் புகைப்படம் சேர்ந்தே பாடும் இதை நீங்கள் புளுடூத் மற்றும் சி‌டி போன்ற வைகளில் பதிந்து யாருக்கு கொடுத்தாலும் அதிலும் உங்கள் புகைப்படம் இணைந்தே ஒலிக்கும்.
 இந்த பதிவு பிடித்திருக்கிறதா ...பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் இந்த தகவல் கண்டிப்பாக போய் சேர உங்கள் சமூக வலைதளத்தில் பரப்புங்கள் .நன்றி... இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்
இமெயில்- vpoiyamozhi.gmail.com





பதிவுகளை மின்னஞ்சலில் பெற

9 comments:

  1. Rompa useful irunthuchu.nandri

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மதிப்பு மிக்க பாராட்டுக்கு நன்றி நண்பரே

      Delete
  2. அருமையான பதிவு நண்பா பகிர்ந்தமைக்கு நன்றி!!! பல அற்புதமான பாடல்களிலும் முகம் சுளிக்க கூடிய புகைப்படங்கள் இருக்கின்றன அதை மாற்ற உங்கள் பதிவு உதவும்

    ReplyDelete
  3. உங்கள் மதிப்பு மிக்க பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. மிகவும் அருமை , நன்றி சார்

    ReplyDelete
  5. நல்ல தகவல் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு , வருகைக்கு நன்றி சகோ .

      Delete
  6. கணிப்பொறியை பற்றி தெரியாத என்னை போன்ற வருக்கு அருமையான தளம்

    ReplyDelete
  7. super very useful thanks keep it up

    ReplyDelete