என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Wednesday 9 May 2012

கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸில் , நமக்கு பிடித்த இணய தள முகவரிகளை புக் மார்க் செய்வது எப்படி ?



கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸ்இரண்டுமே புகழ் பெற்ற இணைய உலாவிகள் இவற்றின் மூலம் இணையத்தில் உலாவரும்போது நல்ல பதிவுகள் யாராவது வெளியிட்டிருப்பார்கள் அதன் முகவரியை பார்த்தால் அதிக குறியீடுகள் சிம்பல்கள் இருக்கும் ,அதை எழுதி வைத்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்துவது கடினம் .அதனால் அந்த முகவரியை நமது பிரவுசரிலேயே புக் மார்க் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதே இந்த பதிவு




முதலில் கூகுள் குரோம் பிரவுசர் ஓபன் செய்யவும் .அதன் வலது மேல் மூலையில் ஒரு ஸ்பேனர் அடையாளத்தில் ஒரு சிம்பல் இருக்கும் அதை கிளிக் செய்து படத்தில் உள்ளவாறு book mark---செலக்ட் செய்து show bookmarks bar டிக் செய்யவும் 








நமக்கு பிடித்த வெப் சைட் முகவரியை இட்டு அங்கு செல்லவும்
அட்ரஸ் பார் முடிவில் ஒரு ஸ்டார் இருக்கும் அதை கிளிக் செய்யவும் இனி வரும் விண்டோவில் book marks bar செலக்ட் செய்து அதில் other book marks  ஐ கிளிக் செய்யவும்  பிறகு done  செய்யவும் புக்மார்க் பண்ணியாச்சு இனி அந்த முகவரி உள்ள ஃபோல்டர்  other book mark கிளிக் செய்து நமக்கு பிடித்த தளத்திற்கு செல்லலாம் .

படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும் 















குறிப்பு : Choose another folder செலக்ட் செய்து தனித்தனியாக music ,software ,movie ,என name கொடுத்தும் பயன்படுத்தலாம் 


அடுத்து ஃபயர்ஃபாக்ஸ் இதற்கு இடது மேல் மூலையில் ஆரஞ்சு கலரில் உள்ள fire fox arrow key கிளிக் செய்து option அதில் படத்தில் உள்ளவாறு menu bar ,navigation toolbar, book mark tool bar மூன்றிலும் டிக் செய்யவும் இன்னும் ஒரு முறை இருக்கிறது view – toolbars --- menu bar ,navigation toolbar, book mark tool bar மூன்றிலும் டிக் செய்யவும் அவ்வளவுதான்
படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்
 


இனி புதிதாக ஒரு விண்டோ வந்திருக்கும் . இனி நமக்கு பிடித்த வெப் சைட் முகவரியை இட்டு அங்கு செல்லவும் .சென்றபின் மேலே book marks அதை கிளிக் செய்து book mark this page கிளிக் செய்யவும் வரும் விண்டோவில் done செய்யவும் .புக் மார்க் பண்ணியாச்சு.

எங்கே உங்களின் விருப்பமான என் முகவரியை புக் மார்க் செய்யுங்கள் பார்க்கலாம்……..
இனி நீங்கள் மறுபடியும் இணையம் வரும் பொது book mark செலக்ட் செய்து அதில் உள்ள முகவரிகளை கிளிக் செய்து டென்ஷன் இல்லாமல் பார்க்கலாம் 




 .  குறிப்பு: இதில் நூற்றுக்கணக்கான முகவரிகளை புக் மார்க் செய்யலாம் இதை உங்கள் சொந்த கம்ப்யூட்டர் லேப்டாபில் செய்து பயன்படுத்துவது நல்லது

எனது அடுத்த பதிவு உங்கள் இணைய உலாவிகளில் (பிரௌசர் ) உள்ள புக் மார்க் மற்றும் add – ons , settings அப்படியே பேக்கப் எடுத்து அடுத்த கணினியில் பயன் படுத்துவது எப்படி ....?





என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கிறதா உங்களைப்போல் மற்றவர்களுக்கும் இந்த தகவல் போய் சேர வேண்டும் மறக்காமல் கீழே இண்டலி, தமிழ் 10, பேஸ் புக்  ,டுவிடர், கூகுள் பிளஸ் போன்றவற்றில் share மற்றும் ஓட்டு போட்டு செல்லவும்  நன்றி ..




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

2 comments:

  1. Tiny tips but useful to the starters. I think your audience are they. Keep posting upgraded articles and help the people using computers not just for typing in office.
    But using image verification is annoying to post a comment. Please remove it

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை மதிக்கிறேன் உண்மை . இது கம்ப்யூட்டர் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்காக இடையில் ஒரு பதிவு .கருத்திட்டதற்கு நன்றி .

      Delete